கட்சிப் பெயரை அறிவித்தார் கமல் ஹாசன்

கட்சிப் பெயரை அறிவித்தார் கமல் ஹாசன்

மதுரை – ஒத்தக்கடையில் இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சிக்கொடியை ஏற்றி, கட்சியின் பெயரையும் முதன்முறையாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். “மக்கள் நீதி மையம்” என்ற பெயரில் தனது கட்சியை நடிகர் கமல் ஹாசன் அங்குரார்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இணைந்த கரங்களுடன் கூடிய வெண்ணிறக் கொடியைக் கட்சிக்கொடியாக நடிகர் கமல் ஹாசன் வௌிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்பாட்டம் காரணமாக கொழும்பு புறக்கோட்டையினை அண்மித்த பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக எமது ஊடகவியலாளர் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்கள் வீதியில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிகாலையில் பஸ்ஸில் நேர்ந்த சோகம்

அதிகாலையில் பஸ்ஸில் நேர்ந்த சோகம்

பண்டாரவளை,தியத்தல்லாவை, கஹகொல்ல பகுதியில் இன்று காலை தனியார் பயணிகள் பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5.30 அளவில் பண்டாரவளையில் இருந்து எபரவ கிராமத்தை நோக்கி பயணித்த பஸ்ஸிலேயே குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுள் பெண்ணொருவருவருடன் 7 பொதுமக்களும் 7 இராணுவத்தினரும் 5 வான்படையினரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்கள் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.  

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கார் பூமியின் மீது மோதலாம் : விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கார் பூமியின் மீது மோதலாம் : விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஸ்பேஸ்எக்ஸ் என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான எலன் மஸ்க்  சில நாட்களுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பிய உலகின் முதல் காராகிய Tesla roadster தன்னுடன் ‘Starman’ என பெயரிடப்பட்ட ஒரு டம்மி மனிதனைச் சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்வெளியைச் சென்றடைந்தது. குறித்த கார் விண்வெளியில் வலம் வருவதும் அதன் பின்னணியில் பூமி அழகாகத் தெரிவதும் காரினுள் பொருத்தப்பட்ட கெமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டு இணையதளங்களில் வைரலாக வலம் வந்தது. தற்போது அந்தக் காரின் பாதையை […]

ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது ; 66 பேர் பலி

ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது ; 66 பேர் பலி

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 66 பேருடன் யசூஜ் நகருக்கு சென்ற விமானம்  நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. தெஹ்ரானில் இருந்து யசூஜ் பகுதிக்கு பயணிகளை ஏற்றுக் கொண்டு புறப்பட்ட உள்ளூர் விமானம்  20 நிமிடங்களுக்கு ரேடாரை விட்டு காணமல் போயுள்ளது. ரேடார் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது விமானம் அவசர அவசரமாக தரையிறங்கு முயற்சித்தது போது ஜாக்ரோஸ் மலை பகுதியில் அது விழுந்து நொறுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் […]

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 கோடி ரூபா பெறுமதியான பென்ட்லி கார் ; உரிமையாளர் யார் தெரியுமா..?

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 கோடி ரூபா பெறுமதியான பென்ட்லி கார் ; உரிமையாளர் யார் தெரியுமா..?

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா என்பவரினால் கொள்வனவு செய்யப்பட்ட கார் தொடர்பில் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. அவரால் கொள்வனவு செய்யப்பட்ட Bentley Mulsanne Hallmark என்ற கார் கடந்த 15 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பெறுமதி இலங்கை  16 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. Bentley Mulsanne Hallmark என்ற வாகனம் உலகில் மொத்தமாக 50 மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறுதியாக நிர்மாணிக்கப்பட்ட காரினை தம்மிக்க பெரேரா […]

புதுக்கடை சம்பவம்; இருவர் பலி

புதுக்கடை சம்பவம்; இருவர் பலி

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் பலியாகியுள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பொது மக்கள் தாக்கியதில் அவரும் பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதமரை நீக்குவது தொடர்பில் சட்டத்துறை ஆலோசனை பெற திட்டம்

பிரதமரை நீக்குவது தொடர்பில் சட்டத்துறை ஆலோசனை பெற திட்டம்

பிரதமரை நீக்குவது தொடர்பில் சட்டத்துறை ஆலோசனை பெறவுள்ளதாக பொது எதிர்க் கட்சியிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக வெல்கம எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஐ.ம.சு.மு. அரசாங்கம் அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு; தினேஷ் குணவர்தன எம்.பி.

ஐ.ம.சு.மு.  அரசாங்கம் அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு; தினேஷ் குணவர்தன எம்.பி.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைப்பதற்கு பொது எதிரணி எந்தவிதமான நிபந்தனைகளும் இன்று ஆதரவினை வழங்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தினேஷ் குணவர்தன எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஐ.ம.சு.மு. அரசாங்கத்தை அமைப்போம்; சுசில் பிரேமஜயந்த

ஐ.ம.சு.மு. அரசாங்கத்தை அமைப்போம்; சுசில் பிரேமஜயந்த

பிரதமரை பதவியிலிருந்து நீக்கி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை அமைப்போம் என் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இன்று காலை முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்தபோதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கூறியுள்ளார்.