திருகோணமலையில் பழங்கால பீராங்கி கண்டுபிடிப்பு

திருகோணமலையில் பழங்கால பீராங்கி கண்டுபிடிப்பு

திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் புதிய கட்டிட அஸ்திவார குழி தோண்டும் போது பழங்கால பீராங்கி ஒன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, சுமார் 15 அடி நீளங்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு தொள்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக துறைமுகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முத்து சிவலிங்கம் பிரதியமைச்சராக பதவி பிரமாணம்

முத்து சிவலிங்கம் பிரதியமைச்சராக பதவி பிரமாணம்

சிறு மற்றும் ஆரம்ப தைத்தொழில் பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கம் பதவி பிரமாணம் செய்துள்ளார். இன்று நண்பகல் (15) 12.15 மணியளவில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக மையம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் ; ராஜித

அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் ; ராஜித

அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பினை அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாராட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றி ; மஹிந்தவின் கடைசி மகன் தமிழில் பாடல் வெளியீடு

உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றி ; மஹிந்தவின் கடைசி மகன் தமிழில் பாடல் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன், தமிழ் மொழியில் பாடல் ஒன்றினை பாடி வெளியிட்டுள்ளார். அண்மைய காலமாக ரோஹித ராஜபக்ஷ  இசை அல்பங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரால் இவ்வாறு பல பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள இணையத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளன. இந்நிலையில் முதல் முறையாக தமிழ் மொழியில் பாடல் ஒன்றை பாடி அவரின் உத்தியோகப்பூர்வ யூடியுப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நீண்ட காலமாக தமிழ் […]

அமெரிக்காவில் பாரிய துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி

அமெரிக்காவில் பாரிய துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பார்க்லோண்டில் உள்ள உயர்நிலை பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட பாரிய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 20 பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் பழைய மாணவரான 19 வயதுடைய, நிக்கலஸ் க்ரூஸ் என்பவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளாதாக கண்டறியப்பட்டதை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒழுக்காற்று நடவடிக்கைகளின் காரணமாக அவர் பாடசாலையிலிருந்து […]

தென்னாபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்

தென்னாபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா பதவி விலகியுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ், ஜனாதிபதி ஸூமாவை பதவி விலக வலியுறுத்தியதை தொடர்ந்தே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், 75 வயதான துணை ஜனாதிபதி சிரில் ரமபோசாவை தேசிய காங்கிரஸ் புதிய தலைவராக தேர்வு செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த ஜேக்கப் ஸூமா பல ஊழல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

கிராண்ட்பாஸ் சம்பவம் ; பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கிராண்ட்பாஸ் சம்பவம் ; பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று (14) பிற்பகல் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் சிக்குண்டு, சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் இராணுவத்தினர், பொலிஸார் , தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

யாழ்.மாநகர முதல்வராக ஆர்னோல்ட் தெரிவு

யாழ்.மாநகர முதல்வராக ஆர்னோல்ட் தெரிவு

யாழ்.மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

1 2 3 22