கிராண்ட்பாஸ் சம்பவம் ; பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கிராண்ட்பாஸ் சம்பவம் ; பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று (14) பிற்பகல் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் சிக்குண்டு, சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் இராணுவத்தினர், பொலிஸார் , தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.