இளவரசர் ஹென்றிக் உறக்கத்திலேயே மரணமடைந்தார்

இளவரசர் ஹென்றிக் உறக்கத்திலேயே மரணமடைந்தார்

டென்மார்க் அரசி மார்க்ரெட்டின் கணவரான இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் நேற்று (13) மரணமடைந்தார் என அரச மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இவர் 83 வயதான ஹென்றிக் கடந்த சில மாதங்களாக மூளை கட்டி நோயாலும், உடல் நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்தார் எனவும் இதையடுத்து, கோபன்ஹேகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

டென்மார்க் அரசியாக இருந்து வருபவர் மார்க்ரெட். இவரது கணவர் இளவரசர் ஹென்றிக். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இது தொடர்பாக அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எங்கள் மதிப்புக்குரிய இளவரசர் ஹென்றிக் ஆழ்ந்த உறக்கத்திலேயே மரணம் அடைந்தார் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள சென்றிருந்த டென்மார்க் பட்டத்து இளவரசரான பிரடெரிக் அவசரமாக நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

One Response to "இளவரசர் ஹென்றிக் உறக்கத்திலேயே மரணமடைந்தார்"

  1. Pingback: இளவரசர் ஹென்றிக் உறக்கத்திலேயே மரணமடைந்தார் – Express News

Leave a Reply

Your email address will not be published.