மருத்துவமனை கட்டணம் செலுத்தாததால் பிறந்த குழந்தைக்கு கிடைத்த தண்டனை

மருத்துவமனை கட்டணம் செலுத்தாததால் பிறந்த குழந்தைக்கு கிடைத்த தண்டனை

மத்திய ஆப்ரிக்கா காபனோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் சோனியா ஒகொமியா என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்திற்காக பணம் செலுத்த இருந்த நிலையில் திடீரென அவருக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. பிரசவ செலவு 2 மில்லியன் (மத்திய ஆப்ரிக்காபணம்) கட்டவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

இதனால் செய்வது அறியாமல் திகைத்த சோனியா ஒகொமியா குழந்தை மருத்துவமனையில் இருக்க முடிவு செய்தார். மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாமல் சோனியா ஒகொமியா தவித்து வந்தார்.

இந்த நிலையில் பிறந்த குழந்தை கடந்த சில மாதங்களாக இங்குபேட்டரில் வைக்கபட்டு இருந்தது. இது தொடர்பாக மீடியாவில் செய்திகள் வெளியாயின. பின்னர் குழந்தையை மீட்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி உட்பட பலரும் அந்த பெண்ணிற்கு உதவி செய்தனர். ஐந்து மாதங்கள் பிறகு பிறந்த குழந்தை தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் குழந்தை கடத்தல்  வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அந்த குழந்தைக்கு ஏஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.