நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா கமல்?

நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா கமல்?

முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் நடிகர் கமல் தற்போது தான் நடித்து வரும் இந்தியன் 2 படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கமல் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களில் நடித்து வருகிறார். விஸ்வரூபம் 2 படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளிவர தயாராக உள்ளது.

சபாஷ் நாயுடு படமும் ஓரளவு முடிந்துவிட்டது. இந்த படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்நிலையில் கமல் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். வரும் 21 ஆம் திகதி அப்துல் கலாம் இல்லத்தில் புதிய கட்சி, பெயர், கொள்கைகள் உள்ளிட்டவற்றை கமல் அறிவிக்கவுள்ளார்.

இதற்கிடையில் நடிகர் கமல் அமெரிக்காவில் தமிழர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அமெரிக்க வாழ் தமிழர்களிடையே அவர் பேசியபோது, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதால், படங்களில் நடிக்க நேரம் கிடைக்குமா தெரியவில்லை என குறிப்பிட்டார்.

One Response to "நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா கமல்?"

  1. Pingback: நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா கமல்? – Express News

Leave a Reply

Your email address will not be published.