தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

உலக அதிசயத்தின் ஒன்றாக திகழும் தாஜ்மகாலை காண்பதற்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தாஜ்மகாலை காண்பதற்கான நுழைவுக் கட்டணம் 40 ரூபாயிலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்படுகிறது. தாஜ்மஹாலின் முக்கிய மசூதியை காண்பதற்கு 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

தற்போது முக்கிய மசூதியை காண்பதற்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கட்டண உயர்வு வருகின்ற ஏபரல் 1 ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.மேலும் 50 ரூபாய்க்கு வழங்கப்படும் டிக்கெட் 3 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலை பாதுகாக்கவே இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.ஆனால் தாஜ்மகாலை பார்க்க கூடாது என்பதற்காகவே இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட உள்ளது என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது.

One Response to "தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு"

  1. Pingback: தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு – Express News

Leave a Reply

Your email address will not be published.