இன்று முதல் அதிவேக வீதியில் நிகழவுள்ள மாற்றம் : வேக அளவீட்டு இயந்திரக் கட்டமைப்பு நடைமுறையில்…!

இன்று முதல் அதிவேக வீதியில் நிகழவுள்ள மாற்றம் : வேக அளவீட்டு இயந்திரக் கட்டமைப்பு நடைமுறையில்…!

அதிவேக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வாகன வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான வேக அளவீட்டு இயந்திரக் கட்டமைப்பு இன்று முதல் செயற்படுத்தப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனூடாக வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்படுவதுடன், வேகக் கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களின் புகைப்படங்கள் வெளியேறும் வாயிலில் இருக்கும் கணினி ஊடாக அச்சிடப்பட உள்ளது.

இந்தப் புகைப்படங்களில் வாகன இலக்கம், கண்காணிப்பு நேரம் மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் பயணித்த வேகம் போன்ற தகவல்கள் அச்சிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் வருடாந்தம் இடம்பெறும் விபத்துக்களில் 27சதவீதமானவை அதிக வேகத்தினால் இடம்பெறும் விபத்துக்களாகும். இதை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து சுற்றுலாப் பொலிஸ் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.