இந்­துக்­களின் வணக்­க ஸ்­தலங்கள் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்கள் தாக்குதல் : மன்­னாரில் சம்பவம்

இந்­துக்­களின் வணக்­க ஸ்­தலங்கள் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்கள் தாக்குதல் : மன்­னாரில் சம்பவம்

இந்து சமய மக்­களால் நேற்று மகா சிவ­ராத்­திரி தினம் அனுஷ்­டிக்கப்படவிருந்த நிலையில் மன்னார் பகு­தியில் மூன்று இடங்­களில் இந்­துக்­களின் வணக்க சிலைகள் உடைக்­கப்­பட்டும், அகற்­றப்­பட்டும் காணப்­பட்­டமை மக்கள் மத்­தியில் அதிர்ச்­சியும் கவ­லையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

திங்­கட்­கி­ழமை இரவு இடம்­பெற்ற இச்­சம்­பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
மேலும்,

லிங்­கேஸ்­வரர் தேவஸ்­தா­னத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த மூன்று சிலை­கள் இனம் தெரி­யா­த­வர்­களால் திரு­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தாழ்­வு­பாடு பிர­தான வீதி­யி­லுள்ள கீரி சந்­தியில் நீண்ட கால­மாக அமைக்­கப்­பட்­டி­ருந்த ஆலை­யடி பிள்­ளையார் சிலை­யையும் இனம் தெரி­யாத நபர்கள் உடைத்து சேத­மாக்­கி­யுள்­ளனர்.

மேலும் மன்னார் தள்­ளாடி விமான ஓடு பாதைக்கு முன்­பாக அமைக்­கப்­பட்­டி­ருந்த பிள்­ளையார் சிலை­யும் திரு­டப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டத்தில் ஏற்­க­னவே அமைக்­கப்­பட்­டி­ருந்த பிள்­ளையார் சிலை பல தட­வைகள் உடைக்­கப்­பட்­ட­மையால் இவ்­வி­டத்தை விட்டு சற்று தள்ளி புதிய இடத்தில் அமைத்­தி­ருந்த நிலை­யி­லேயே மீண்டும் இந் நிலைமை ஏற்­பட்­டுள்­ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published.