இருபதுக்கு இருபது தொடரில் ஷக்கிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்

இருபதுக்கு இருபது தொடரில் ஷக்கிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்

(நெவில் அன்­தனி)

இலங்­கைக்கு எதி­ரான இரண்டு போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்­கான பங்­க­ளாதேஷ் அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட சக­ல­துறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் விளை­யா­டு­வது சந்­தே­கத்­திற்­கி­ட­மா­கி­யுள்­ளது.

தனது கைவி­ரலில் ஏற்­பட்­டுள்ள காயம் பூரண குண­ம­டை­யா­ததால் தன்னால் விளை­யாட முடியும் என்­பதை உறு­தி­யாகக் கூற­மு­டி­யாது என ஷக்கிப் அல் ஹசன் தெரி­வித்தார்.‘‘இது குறித்து உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் எதுவும் இல்லை. ஆனால் எனது கையில் ஏற்­பட்ட காயம் பூரண குண­ம­டை­வ­தற்கு இரண்டு வாரங்கள் செல்லும் என டாக்­டர்கள் கூறினர். எனவே சர்­வ­தேச இரு­பது 20 தொடரில் நான் விளை­யா­டு­வது சந்­தே­கமே’’ என ஷக்கிப் கூறினார்.

பங்­க­ளா­தேஷில் நடை­பெற்ற மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்­டியில் (ஜன­வரி 27) இலங்கை அணி துடுப்­பெ­டுத்­தா­டிக்­கொண்­டிருந்த­போது 42ஆவது ஓவரில் ஷக்கிப் அல் ஹசனின் வலது கையில் காயம் ஏற்­பட்­டது. அதன் பின்னர் அவர் டெஸ்ட் தொட­ரிலும் விளை­யா­ட­வில்லை.

நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது போட்­டிக்­கான 15 வீரர்­களைக் கொண்ட குழாத்தில் அணித் தலை­வ­ராக ஷக்கிப் அல் ஹசன் பெய­ரி­டப்­பட்­டுள்ளார். அவர் விளை­யா­டா­விட்டால் பெரும்­பாலும் மஹ்­மு­துல்லாஹ் அல்­லது முஷ்­பிக்குர் ரஹிம் அணித் தலை­வ­ராக விளை­யா­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை பங்­க­ளாதேஷ் குழாத்தில் ஐந்து புதிய வீரர்கள் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.
அபு ஜயேத் (30 இ20 போட்­டி­களில் 34 விக்­கெட்கள்), ஆரிப்உல் ஹக் (44 இ20 போட்­டி­களில் 584 ஓட்­டங்கள்), மெஹெதி ஹசன் (12 இ20 போட்­டி­களில் 10 விக்­கெட்கள்), ஸக்கிர் ஹசன் (18 இ20 போட்­டி­களில் 201 ஓட்­டங்கள்), 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண அணியின் உதவித் தலைவர் 18 வய­தான அவிப் ஹொசெய்ன் (11 இ20 போட்­டி­களில் 11 விக்­கெட்கள்) ஆகி­யோரே புதிய வீரர்­க­ளாக குழாத்தில் இடம்­பெ­று­கின்­றனர்.

நியூ­ஸி­லாந்தில் நடை­பெற்ற 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் இங்­கி­லாந்து, தென் ஆபி­ரிக்கா, கனடா ஆகிய அணி­க­ளுக்கு எதி­ராக அவிப் ஹொசெய்ன் அரைச் சதங்­களைப் பெற்றார்.இவர்­க­ளை­விட தமிம் இக்பால், முஸ்தாபிக்குர் ரஹிம், சௌம்யா சர்கார், சபிர் ரஹ்மான், முஸ்தாபிஸுர் ரஹ்மான், ரூபெல் ஹசன், மொஹமத் சய்புதின், அபு ஹைதர் ஆகிய சிரேஷ்ட வீரர்களும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.