நீர்கொழும்பு பகிரங்க சர்வதேச சக்கர இருக்கை டென்னிஸ் போட்டியில் தர்மசேன சம்பியன்

நீர்கொழும்பு பகிரங்க சர்வதேச சக்கர இருக்கை டென்னிஸ் போட்டியில் தர்மசேன சம்பியன்

(நெவில் அன்­தனி)

நீர்­கொ­ழும்பில் நடை­பெற்ற நீர்­கொ­ழும்பு பகி­ரங்க சர்­வ­தேச சக்­கர இருக்கை டென்னிஸ் போட்­டி­களில் இலங்­கையின் முன்­னே­றி­வரும் மாற்­றுத்­தி­ற­னாளி டி.எஸ்.ஆர். தர்­ம­சேன ஒற்­றையர் சம்­பி­ய­னானார்.

சர்­வ­தேச சக்­கர இருக்கை டென்னிஸ் போட்­டி­களில் ஒற்­றை­ய­ருக்­கான தர­வ­ரி­சையில் 95ஆம் இடத்தில் இருந்த தர்­ம­சேன, கடந்த ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் தென்கொரி­யாவின் சங் ஹோ ஹோவை 2–1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் (6–3, 3–6, 6–3) வெற்­றி­கொண்டு தர்­ம­சேன சம்­பி­ய­னானார்.

இந்த வெற்­றி­யுடன் தர­வ­ரி­சையில் 91ஆம் இடத்­திற்கு தர்­ம­சேன முன்­னே­றி­யுள்ளார்.
இதற்கு முன்­னோ­டி­யாக நடை­பெற்ற கால் இறுதிப் போட்­டியில் தென் கொரி­யாவின் முன்­னணி வீரர் ஹா ஜெல் லீயை 6–2, 7–5 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2 நேர் செட்­களில் தர்­ம­சேன வெற்­றி­கொண்டார்.

தொடர்ந்து அரை இறுதிப் போட்­டியில் இலங்­கையின் தேசிய சம்­பியன் காமினி திசா­நா­யக்­கவை 6–2, 6–3 என்ற புள்­ளி­களைக் கொண்ட 2 செட்­களில் தர்­ம­சேன வெற்­றி­கொண்டார்.
இதே­வேளை, இரட்­டை­ய­ருக்­கான சக்­கர இருக்கை டென்னிஸ் இறுதிப் போட்­டியில் மலே­ஷி­யாவின் பிர்தௌஸ் இப்­ராஹிம், யுஷாஸ்வன் யூசுவ் ஜோடி­யி­னரை 2 நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட தென் கொரி­யாவின் ஹா ஜெல் லீ. சங் ஹோ ஹோ ஜோடி­யினர் சம்­பி­ய­னா­கினர்.

இப் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், இந்­தியா, இஸ்­ராயல், மலே­ஷியா, தென் கொரியா, தாய்­லாந்து, இலங்கை ஆகிய நாடு­களைச் சேர்ந்த வீரர்கள் ஒற்­றையர் பிரிவில் பங்­கு­பற்­றினர்.
இப் போட்­டியின் தொடர்ச்­சி­யாக இலங்கை பகி­ரங்க டென்னிஸ் போட்­டிகள் டென்னிஸ் சங்கத் தலை­மை­யக அரங்­கு­களில் இன்­று­முதல் 17ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.
தொடர்ந்து எஸ்.எஸ்.சி. பகி­ரங்க டென்னிஸ் போட்­டிகள் பெப்ரவரி 18 முதல் 21 வரை நடைபெறவுள்ளன.இறுதியாக உலகக் கிண்ண சக்கர இருக்கை டென்னிஸ் தகுதிகாண் போட்டிகள் பெப்ரவரி 22 முதல் 25வரை நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.