பெண் கபடி வீரருக்கு ‍‍நேர்ந்த கொடுமை

பெண் கபடி வீரருக்கு ‍‍நேர்ந்த கொடுமை

அரியானா மாநிலம் ரோஹ்தக் கிராமத்தை சேர்ந்த தேசிய அளவிலான பெண் கபடி வீரர் ஒருவர் அரியானா மகளிர் ஆணையதில் புகார் அளித்துள்ளார். புகாரில் என் பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன் தனி அறையில் பூட்டி வைத்து என்னை கட்டாயமாக திருமணம் செய்யதுகொள்ள வற்புறுத்துக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கத்தாருக்கும், மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

2017-ல் வயதானவருக்கு என்னை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். நான் எதிர்ப்பு தெரிவித்த போது என்னை தனி அறையில் அடைத்து வைத்து பூட்டி கட்டாயமாக திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்துவிட்டேன். அதனை தொடர்ந்து சில நபர்களுடன் தந்தை என்னை மீண்டும் என்னை கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டனர். தற்போது மீண்டும் அவர்களிடம் இருந்து தப்பிவிட்டேன். நான் கபடியில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published.