கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் பாரிய மரம் சரிவு

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் பாரிய மரம் சரிவு

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில் அம்பலாந்தொட்ட தவாலுவில பிரதேசத்தில் வீதிக்கு அருகில் இருந்த பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டியொன்றுக்கும் விற்பனை நிலையமொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மின்சார தூண் ஒன்றும் சரிந்து வீழந்துள்ளதுடன் இதனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் காவல்துறையினர் பிரதேசவாசிகள் மற்றும் அம்பலாந்தொட்ட பிரதேச சபை அதிகாரிகளும் இணைந்து அந்த மரத்தை அகற்றியுள்ளனர்.

மேலும் இவ்வாறான பாதுகாப்பற்ற மரங்கள் அங்கு காணப்படுவதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.