மாற்றுத்திறனாளியாக எதிர்நீச்சல் போடும் விளையாட்டு வீராங்கனை துஷ்யந்தி

மாற்றுத்திறனாளியாக எதிர்நீச்சல் போடும்  விளையாட்டு வீராங்கனை துஷ்யந்தி

(நெவில் அன்­தனி)

அற்­பு­த­மான ஆற்­றல்­மிக்க மெய்­வல்­லுநர்கள் பலர் இவ்­வு­லகில் இருக்­கின்­றனர். அத்­த­கை­ய­வர்­களை வெற்றி, புகழ், செல்வம் ஆகிய அனைத்தும் சென்­ற­டை­வது இயல்பு.
இன்னும் சிலர் எத்­த­னையோ முட்­டுக்­கட்­டை­க­ளுக்கு மத்­தியில் வெற்­றி­ந­டை­போட்டு இவ்­வு­லகைப் பிர­மிக்க வைக்­கின்­றனர்.

இவ்­வா­றான உலகில் சிலர் ஊன­முற்­ற­வர்­க­ளாக பிறக்­கின்­றனர். பலர் விபத்­துக்­களில் ஊன­மு­று­கின்­றனர். அதையும் தாண்டி அகோர யுத்­தத்­தினால் எண்­ணற்றோர் ஊன­மு­று­கின்­றனர். இவர்கள் அனை­வ­ருமே உயிர்­வாழ்­வ­தற்­காக எதிர்­நீச்சல் போட்ட வண்ணம் இருப்­ப­தையும் நாம் இவ்­வு­லகில் காணத்தான் செய்­கின்றோம்.

இத்­த­கைய பாதிப்­பு­க­ளுக்­குள்­ளான பலர் விளை­யாட்­டுத்­து­றையில் சொந்த நாட்டில் அல்­லது சர்­வ­தேச அரங்கில் அல்­லது இரண்­டிலும் சாதித்­துள்­ள­துடன் இன்னும் பலர் சாதிக்­க­வேண்டும் என்ற துடிப்­புடன் வாழ்­கின்­றனர். திட­காத்­தி­ர­மா­ன­வர்கள் விளை­யாட்­டுத்­து­றையில் ஜொலிப்­பது இயல்பு. ஆனால் ஊன­மாக்­கப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் விளை­யாட்­டுத்­து­றையில் சாதிப்­ப­தென்­பது அனைத்­துக்கும் அப்பால் வியத்­தகு விட­ய­மாகும்.

அத்­த­கைய அற்­பு­த­மான ஒரு­வரை சந்­திக்கும் வாய்ப்பு அண்­மையில் கிடைத்­தது.
இள­வ­ரசர் எட்வேர்ட் மற்றும் இள­வ­ரசி சொபி ஆகியோர் இலங்­கைக்கு வரு­கை­தந்­த­போது இலங்கை டென்னிஸ் சங்கத் தலை­மை­ய­கத்தில் பரா மெய்­வல்­லுநர் ஆரோக்­கி­ய­நாதர் துஷ்­யந்­தியை சந்­திக்கும் அரிய வாய்ப்பு ‘ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல்’ பத்­தி­யா­ள­னுக்கு கிடைத்­தது.
அவர் கூறிய விட­யங்கள் பிர­மிக்க வைத்த ­துடன் கண்­க­லங்­கவும் செய்­தன..

இலங்­கையின் கிழக்கு கரை­யோ­ரத்தில் மட்­டக்­க­ளப்பு, – திரு­கோண­மலை வீதியில் அமைந்­துள்ள வாக­ரையில் 1982 ஏப்ரல் 22ஆம் திகதி பிறந்த துஷ்­யந்தி, பிறப்பால் ஊன­மு­ற­வில்லை. இளம் பரா­யத்தில் சுக­தே­கி­யாக வாழ்ந்­தவர்.

ஐந்து வய­தா­ன­போது அவ­ரது தந்தை காணாமல் ஆக்­கப்­பட்ட துயரக் கதையை அவ­ரி­ட­மி­ருந்து அறிந்­து­கொள்ள முடிந்­தது. இன்­று­வரை தனது தந்­தைக்கு என்ன நேர்ந்­த­தென்று தெரி­ய­வ­ர­வில்லை என அவர் கவ­லை­யுடன் குறிப்­பிட்டார். அதன் பின்னர் தாயின் அர­வ­ணைப்பில் அவரும் அவ­ரது சகோ­த­ரர்­களும் வாழ்ந்­து­வந்­தனர்.

வாகரை மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயின்ற காலத்தில் துஷ்­யந்தி, சிறு பரா­யத் தில் ஏனைய பிள்­ளை­களைப் போல் கல்வி, கலை, விளை­யாட்­டுத்­துறை அனைத்­திலும் மிகுந்த ஆர்வம் காட்­டி­வந்தார். குறிப்­பாக ஓட்டம், நீளம் பாய்தல், எறிதல் (குண்டு, பரிதி வட்டம், ஈட்டி) ஆகிய சகல நிகழ்ச்­சி­க­ளிலும் சிறந்து விளங்கி பாட­சாலை போட்­டி­களில் பல முதலாம் இடங்­களைப் பெற்­றவர். அத்­துடன் நின்­று­வி­டாமல் மாவட் டம், மாகாண மட்­டங்­க­ளிலும் கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் சிறந்த மெய்­வல்­லு­ந­ராகத் திகழ்ந்­தவர்.

இப் போட்­டி­களில் அவர் வென்­றெ­டுத்த பதக்­கங்கள், சான்­றி­தழ்கள் உட்­பட பல விரு­துகள் 2004 ஆழிப் பேர­லை­யினால் அள்­ளுண்டு சென்­று­விட்ட கதை­யையும் அவர் கவ­லை­யுடன் கூறினார்.
போர்ச் சூழல் கார­ண­மாக 11ஆம் வகுப்­புடன் படிப்பை நிறுத்­திக்­கொண்ட துஷ்­யந்தி தனது குடும்­பத்­தி­ன­ரு­டனும் ஏனைய கிரா­மத்­த­வர்­க­ளு­டனும் வாகரை வைத்­தி­ய­சா­லையில் தஞ்சம் புகுந்தார். அங்­குதான் அவ­ரது வாழ்க்­கையில் விதி விளை­யா­டி­யது.. வாகரை வைத்­தி­ய­சாலை மீது ஷெல் வீழ்ந்­த­போது துஷ்­யந்­தியின் வாழ்க்­கை­யிலும் இடி தாக்­கி­யது. ஷெல் தாக்­கு­த­லினால் உடலின் இடது பகு­தியில் தலை, இடுப்பு, கால், கை அனைத்­திலும் சன்­னங்கள் ஊடு­றுவி படு­கா­யத்­துக்­குள்­ளாகி மாற்­றுத்­தி­ற­னாளியாக்­கப்­பட்டார்.

அன்­றி­லி­ருந்து தொடர்ந்து வாரா வாரம் வைத்­திய ஆலோ­சனை பெற மூன்று மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேல் பிர­யாணம் செய்­ய­வேண்­டிய துர்ப்­பாக்­கி­ய­சா­லி­யானார் துஷ்­யந்தி.
சுக­தே­கி­யாக இருந்த காலப்­ப­கு­தியில் கலை நிகழ்ச்­சி­களில் பெரு ஆர்­வத்­துடன் பங்­கு­பற்­றி­வந்த துஷ்­யந்தி, 2010ஆம் ஆண்­டி­லி­ருந்து மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான விளை­யாட்டு நிகழ்ச்­சி­களில் பங்­கு­பற்­றி­வ­ரு­கின்றார். மாவட்­டத்தில் நடை­பெற்ற மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான ஓட்டப் போட்­டிகள் மற்றும் ஈட்டி எறி­தலில் வெற்­றி­பெற்­றுள்ளார்.

தேசிய ரீதியில் நடை­பெற்ற மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்­டி­க­ளிலும் ஈட்டி எறி­த­லிலும் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாகப் பங்­கு­பற்­றி­வரும் இவர் பதக்­கங்­க­ளையும் வென்­றுள்ளார். 2016இல் 100 மீ., 200 மீ. போட்­டி­களில் தங்கப் பதக்­கங்­களை வென்ற இவர் கடந்த வருடம் இரண்டு நிகழ்ச்­சி­க­ளிலும் வெள்ளிப் பதக்­கங்­களை வென்றார். அத்­துடன் ஈட்டி எறி­தலில் தங்கப் பதக்­கத்தை வென்றார். இதன் மூலம் அவஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான போட்­டியில் பங்­கு­பற்ற இலங்­கை­யி­லி­ருந்து தெரி­வா­கி­யுள்ளார்.

மட்­டக்­க­ளப்பில் கடந்த வருடம் நடை­பெற்ற தமிழ் பரா விளை­யாட்டுப் போட்­டியில் 100 மீ., 200 மீ. ஆகிய இரண்டு நிகழ்ச்­சி­க­ளிலும் தங்கம் வென்ற இவர், நீளம் பாய்­தலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.1987இல் தந்தை காணா­ம­லாக்­கப்­பட்ட பின்னர் தனது தாயார் தோட்டம் செய்து தன்­னையும் தனது சகோ­த­ரர்­களை வளர்த்து ஆளாக்­கி­ய­தாக துஷ்­யந்தி குறிப்­பிட்டார்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தனியார் அலு­வ­லகம் ஒன்றில் தொழில் செய்து கிடைத்த சம்­ப­ளத்தில் மாதா மாதம் 5,000 ரூபாவை வங்கிக் கணக்­கி­லிட்டு அதனைக் கொண்டு சிறு கடை ஒன்றை நடாத்­தி­ வ­ரு­வ­தா­கவும் சிற்­பி­களைக் கொண்டு தயா­ரிக்கும் அலங்­காரப் பொருட்­களை விற்று பணம் சேர்ப்­ப­தா­கவும் குறிப்­பிட்ட அவர், பொது­ந­ல­வா­திகள், சமூ­க­ந­ல­வா­திகள் எனக் கூறிக்­கொள்ளும் எவரும் தன் மீது கருணை காட்­ட­வில்லை எனவும் அங்­க­லாய்த்தார்.

சுய தொழில் செய்­வ­தற்­காக வங்கி ஒன்றில் கட­னுக்கு விண்­ணப்­பித்­த­போது அவர்கள் கேட்ட கேள்வி தன்னை வருத்­தி­ய­தாக துஷ்­யந்தி குறிப்­பிட்டார்.‘‘நான் சுய­தொழில் செய்­வ­தற்­காக வங்கி ஒன்றில் கடன் கேட்டு விண்­ணப்­பித்தேன். அதற்கு அங்­குள்ள அதி­காரி ஒருவர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான உங்­களால் என்ன சாதிக்க முடியும்? எப்­படி உங்களை நம்பி கடன் கொடுப்­பது? எவ்­வாறு அதைத் திருப்பிச் செலுத்­து­வீர்கள்? என கேள்­விமேல் கேள்வி கேட்டு என் மனதை நோக­டித்­து­விட்டு கடன் தர­மு­டி­யாது என்றும் கூறி­விட்டார். அன்­றுதான் என்னில் ஒரு வைராக்­கியம் ஏற்­பட்­டது. சொந்­தக்­காலில் நிற்­பது என்ற தீர்­மா­னத்­துடன் எனது வாழ்க்­கையைத் தொடர்ந்தேன். எனது தாயார், சகோ­த­ரர்கள் எனக்கு உறு­து­ணை­யாக இருந்து ஊட்­டிய தைரியம் என்னை ஒரு நல்ல நிலைக்கு கொண்­டு­வந்து விட்­டுள்­ளது.

‘‘அன்று நான் எதிர்­கொண்ட இந்த வேத­னையை சாத­னை­யாக மாற்­ற­வேண்டும் என்று சபதம் பூண்டேன். உதவி ஒத்­து­ழைப்பு, அன்பு ஆகி­ய­வற்­றுக்­காக ஏங்­கிக்­கொண்­டி­ருந்த எனக்கு ஏற்­பட்ட ஏமாற்­றத்தால் நான் சோர்ந்து விட­வில்லை. மாறாக எதிர்­நீச்சல் போட்டு வாழ்க்­கையில் வெற்­றி­கண்டேன். முன்னர் என்னை உதா­சீனம் செய்த அதி­காரி எனது முன்­னேற்­றத்தை அறிந்து என்­னிடம் வலிய வந்து கடன் தரு­வ­தா­கவும் எனக்கு வேண்­டிய சகல உத­வி­க­ளையும் செய்­து­கொ­டுப்­ப­தா­கவும் கூறினார். ஆனால் அவரால் எனது நெஞ்சில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட வடு அவ­ரது கோரிக்­கைகை நிரா­க­ரிக்கச் செய்­தது. ஆனால் அவர் என்னை உதா­சீனம் செய்­த­தால்தான் நான் இன்று தன்­னம்­பிக்­கை­யுடன் வாழ்ந்­து­வ­ரு­கின்றேன்’’ என்றார்.

‘‘இப்­போது நான் தொடர்ச்­சி­யான விளை­யாட்­டுத்­துறை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன். எனது பயிற்றுநர் கள் அளித்து வரும் பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் குடும்பத்தினர் வழங்கிவரும் ஒத்துழைப்பு என்பனை என்னை உற்சாகப்படுத்துகின்றன. இந்தப் பயிற்சிகளுடன் நான் பங்குபற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று இலங்கைக்கு புகழீட்டிக்கொடுக்க முடியும் என நம்புகின்றேன்’’ என துஷ்யந்தி மன உறுதியுடன் குறிப்பிட்டார்.

இதேவேளை, புறக்கணிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினரால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள் என்பவற்றை நடத்தியதாகவும் அதன் பலனாக சமூகத்தில் தங்களுக்கு நல்ல அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

One Response to "மாற்றுத்திறனாளியாக எதிர்நீச்சல் போடும் விளையாட்டு வீராங்கனை துஷ்யந்தி"

  1. Pingback: மாற்றுத்திறனாளியாக எதிர்நீச்சல் போடும் விளையாட்டு … – தமிழ்வலை

Leave a Reply

Your email address will not be published.