தேசிய ஒலிம்பிக் தலைமைப் பதவிக்கு சுரேஷ், ரொஹான் போட்டியிடுகின்றனர்

தேசிய ஒலிம்பிக் தலைமைப் பதவிக்கு சுரேஷ், ரொஹான் போட்டியிடுகின்றனர்

(நெவில் அன்­தனி)

தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் பத­விக்கு இலங்கை டென்னிஸ் சங்கத்தின் உதவித் தலைவர் சுரேஷ் சுப்­ர­ம­ணியம், இலங்கை பட­கோட்ட சங்கத் தலைவர் ரொஹான் பெர்­னாண்டோ ஆகியோர் போட்­டி­யி­டு­கின்­றனர்.

இதனை முன்­னிட்டு ஒலிம்பிக் இல்­லத்தில் கடந்த வெள்­ளி­யன்று இவர்கள் இரு­வரும் இவர்­க­ளது தலை­மை­யி­லான இரண்டு குழு பிர­தி­நி­தி­களும் வேட்பு மனுக்­களை சமர்ப்­பித்­தனர்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தல் எதிர்­வரும் 23ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ள­துடன் பல்­வேறு பத­வி­க­ளுக்கு 27 பேர் போட்­டி­யி­டு­கின்­றனர்.

தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வேட்­பு­ம­னுக்கள் தொடர்பில் ஏதேனும் ஆட்­சே­ப­னைகள் இருப்பின் இன்று பிற்­பகல் 4.00 மணி­வரை அவற்றை சமர்ப்­பிக்க கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

போட்­டி­யி­டு­ப­வர்கள்
சுரேஷ் சுப்­ர­ம­ணியம் தரப்­பினர்
தலைவர் பத­விக்கு சுரேஷ் சுப்­ர­ம­ணியம். செய­லாளர் பத­விக்கு மெக்ஸ்வெல் சில்வா (ஜூடோ), ப்ரகீத் ப்ரியன்­கர பெரேரா (மல்­யுத்தம்). பொருளாளர் பத­விக்கு காமினி ஜய­சிங்க (ஹொக்கி), சேனக்க ரண­சிங்க (சைக்­கி­ளோட்டம்). உதவித்தலை­வர்கள் (4) பத­வி­க­ளுக்கு சமித் எதி­ரி­சிங்க (ஹொக்கி), அசங்க சென­விரட் (றக்பி), ஜோசப் கெனி (பாய்­மரப் படகு), சந்­திம குமார மல்­ல­வ­ஆ­ராச்சி (மல்­யுத்தம்), மேஜர் ஜெனரல் தம்பத் பெர்­னாண்டோ (ஹாண்ட்போல்). உதவி செய­லாளர் பத­விக்கு சந்­தன லிய­னகே (மேசைப்­பந்­தாட்டம்). உதவிப் பொரு­ளாளர் பத­விக்கு நிஷான்த ஜய­சிங்க (பாட்­மின்டன்).

ரொஹான் பெர்­னாண்டோ தரப்­பினர்
தலைவர் பதி­விக்கு ரொஹான் பெர்­னாண்டோ (பட­கோட்டம்). செய­லாளர் பத­விக்கு விராஜ் பெரேரா (பட­கோட்டம்). பொரு­ளாளர் பத­விக்கு ஷிரன்த பீரிஸ் (குறி­பார்த்து சுடுதல்). உதவித் தலைவர் (4) பத­வி­க­ளுக்கு அநுர டி சில்வா (கால்­பந்­தாட்டம்), மேஜர் ஜெனரல் பாலித்த பெர்­னாண்டோ (மெய்­வல்­லுநர்), டயன் கொமஸ் (குத்­துச்­சண்டை), எச். யூ. சில்வா (வில்­லாளர்). உதவி செய­லாளர் பத­விக்கு காஞ்­சன ஜய­ரத்ன (டய்க்­வொண்டோ), உதவி பொரு­ளாளர் பத­விக்கு நிஷான்த பியசேன (ஐந்தம்ச விளையாட்டு).
இப் பதவிகளை விட செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இரு தரப்பிலும் தலா மூவர் போட்டியிடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.