சி.சி.சி. கிரிக்கட் பயிற்­சி­யக அணி­க­ளுக்கு இந்­தி­யாவில் மாறு­பட்ட பெறு­பே­றுகள்

சி.சி.சி. கிரிக்கட் பயிற்­சி­யக அணி­க­ளுக்கு இந்­தி­யாவில் மாறு­பட்ட பெறு­பே­றுகள்

(நெவில் அன்­தனி)

இந்­தி­யாவின் ஹைத­ரா­பாத்தில் நடை­பெற்ற நட்­பு­றவு கிண்ண கிரிக்கட் போட்­டி­களில் பங்­கு­பற்­றிய சி.சி.சி. கிரிக்கட் பயிற்­சி­ய­கத்தின் 15 வய­துக்­குட்­பட்ட அணி சிறந்த பெறு­பே­று­களைப் பதிவு செய்­தது. ஆனால் 12 வய­துக்­குட்­பட்ட அணி­யி­ன­ருக்கு எதிர்­மா­றான பெறு­பே­று­களே கிடைத்துள்ளன.
15 வய­துக்­குட்­பட்ட அணி­யினர் அங்கு விளை­யா­டிய 10 போட்­டி­களில் 8இல் வெற்­றி­பெற்­ற­துடன் இரண்டில் தோல்­வியைத் தழு­வினர்.

12 வய­துக்­குட்­பட்ட அணி­யினர் விளை­யா­டிய 11 போட்­டி­களில் 3இல் மாத்­திரம் வெற்­றி­பெற்­ற­துடன் 8இல் தோல்­வி­களைத் தழு­வினர். இப் போட்­டிகள் யாவும் அணிக்கு 30 ஓவர்­களைக் கொண்­ட­வை­யாக நடத்­தப்­பட்­டன.

15 வய­துக்­குட்­பட்­டோ­ருக்­கான பிரிவில் செய்ன்ற் ஜோன்ஸ் கிரிக்கட் பயிற்­சி­யக அணிக்கும் சி.சி.சி. அணிக்கும் இடையில் நடை­பெற்ற போட்­டிகள் அனைத்தும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தும் வண்ணம் இருந்­தன. ஏனெனில், இரண்டு அணி­களும் ஆற்றல் மிக்க வீரர்­களைக் கொண்­டி­ருந்­தன.
எனினும் டெவின் கிரிக்கட் பயிற்­சி­யகம், அர்ஷாத் அயூப் கிரிக்கட் கழகம், எச்.எம்.வி. கிரிக்கட் பயிற்­சி­யகம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான போட்­டி­களில் சி.சி.சி. கிரிக்கட் பயிற்­சி­யக அணிக்கு இல­கு­வான வெற்­றிகள் கிட்­டின.

15 வய­துக்­குட்­பட்ட போட்­டி­களில் சி.சி.சி. கிரிக்கட் பயிற்­சி­ய­கத்தின் இஷான் ஷர்மா, திவ்யேஷ் ராமையா, பி. ஷியாம் ஆகியோர் துடுப்­பாட்­டத்­திலும் ஷியாம்­சுந்தர் பந்­து­வீச்­சிலும் திற­மையை வெளிப்­ப­டுத்­தினர்.12 வய­துக்­குட்­பட்ட பிரிவில் தேனுஷ்க நாண­யக்­கார, ப்ரகாஷ் கம்­ம­திகே, சஹான் தாபரே, ட்ரவின் நிஷாந்தன் ஆகியோர் பிர­கா­சித்­தனர்.

15 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான போட்­டி­களில் நான்கு விரு­து­களை சி.சி.சி. கிரிக்கட் பயிற்­சியக அணி வீரர்கள் பெற்­றனர். இச் சுற்றுப் போட்­டியில் சிறந்த துடுப்­பாட்­டக்­காரர் மற்றும் தொடர்­நா­யகன் ஆகிய விரு­து­களை இஷான் ஷர்மா வென்­றெ­டுத்தார்.

ஷியாம்­சுந்தர் கிருஷ்­ண­ஸ்ரீராம் சிறந்த பந்­து­ வீச்­சாளர் விருதை தன­தாக்­கிக்­கொண்டார்.
சிறந்த களத்­த­டுப்­பா­ள­ருக்­கான விருது கிஷான் தர்­ம­ரட்­ன­வுக்கு வழங்­கப்­பட்­டது.
12 வய­துக்­குட்­பட்ட பிரிவில் சஹான் தாபரே, தேவிந்து வெல்லாவெல (சிறந்த வீரர்கள்), தேனுஷ்க நாணயக்கார (சிறந்த துடுப்பாட்ட வீரர்), ப்ரகாஷ் கம்மதிகே (சிந்த பந்துவீச்சாளர்), ஆஷேன் கொட்டாச்சி (சிறந்த களத்தடுப்பாளர்) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.