இணையத்தை தெறிக்க விட்ட பிரியா வாரியார் வீடியோ!

இணையத்தை தெறிக்க விட்ட பிரியா வாரியார் வீடியோ!

‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிய நடனம் கடந்த ஆகஸ்ட் மாதம் யூடியுப் தளத்தில் பதிவேற்றப்பட்டது முதல், அது இந்திய அளவில் பிரபலமானது.

தற்போதுவரை இந்த வீடியோவை 18 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது போல் மற்றொரு வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது.

ஒரு அடார் லவ் என்ற படத்திற்காக எடுக்கபட்ட மாணிக்ய மலரேயா பூவி என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பாடலுக்கும் ஷான் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் பாடி உள்ளார் ஜிமிக்கி கம்மல் பாடலையும் இவரே பாடினார்.

இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவே இப்போது இந்த வீடியோ வைரலாக காரணமாகும்.

இந்த படத்தில் பிரியா சிறிய வேடத்தில் நடித்து உள்ளார். பிரியாவின் திறமையை கண்டு அவருக்கு இந்த படத்தில் காட்சிகளை அதிகபடுத்தி உள்ளார் இயக்குனர்.

18 வயதாகும் பிரியாவுக்கு கேரளா திருச்சூர் சொந்த ஊராகும். இவர் மோகினியாட்ட கலைஞராவார்.

ஒமர் லுலு இயக்கத்தில் ஒரு அடார் லவ்’ படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

ஒரே வீடியோவில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். ‘ஒரு அடார் லவ்’ படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனால் அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ அப்லோடு செய்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பலோவர்களை பெற்றது. கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் ப்ரியா.

தன் மீது ரசிகர்கள் வைத்துள்ள பாசத்தை பார்த்து நெகிழ்ந்த ப்ரியா அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாடலை போன்றே படத்திற்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளார்.

மலையாள மனோரமாவுக்கு பிரியா பிரகாஷ் வாரியர் அளித்த பேட்டி வருமாறு:-

இந்திய சமூக ஊடகங்களில் மூன்றாவது மிக பிரபலமான பிரபலமாக இருப்பது எப்படி இருக்கிறது?

நான் இதை அதிகப்படியாக உணர்கிறேன். எனது உற்சாகத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த பாடலின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக என் கல்லூரியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவை அனைத்தும் எனக்கு புதிய அனுபவங்கள்.இத்தகைய ஆதரவு எப்போதும் என்னுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

உங்கள் குடும்பம் மற்றும் கல்லூரி பற்றி கூறுங்களேன்?

நான் திருச்சூர் விமலா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். எங்கள் ,வீடு திருச்சூர் பூங்குன்னத்தில் உள்ளது . எனது தந்தை பிரகாஷ் மத்திய காலால் துறையில் பணியாற்றி வருகிறார். எனது தயார் பிரீத்தா இல்லத்தரசி. எனது இளையசகோதரர் பிரசித் தாத்தா பாட்டியுடன் உள்ளார் என கூறினார்.

 

 

Priya Prakash Song

Agar Tum Mil Jao | Priya Prakash |

Posted by Sarabela Multimedia on Monday, February 12, 2018

Leave a Reply

Your email address will not be published.