டயலொக் றக்பி லீக் கிண்ணத்தை கண்டி சுவீகரித்தது

டயலொக் றக்பி லீக் கிண்ணத்தை கண்டி சுவீகரித்தது

(நெவில் அன்­தனி)

முதல்­தர றக்பி கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான 2017-–18 பரு­வ­கா­லத்­துக்­கு­ரிய டயலொக் றக்பி லீக் போட்­டி­களில் சகல போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்ற கண்டி விளை­யாட்டுக் கழகம் தொடர்ச்­சி­யாக நான்­கா­வது வரு­ட­மாகவும் சம்­பி­ய­னா­னது.

நித்­த­வ­ளையில் ஞாயிற்றுக்கிழமை பெருந்­தி­ர­ளான ர­சி­கர்கள் முன்­னி­லையில் நடை­பெற்ற ஹெவ்லொக்ஸ் கழ­கத்­து­ட­னான கடைசி லீக் போட்­டியில் கடும் சவா­லுக்கு மத்­தியில் 30–28 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்ற கண்டி விளை­யாட்டுக் கழகம் தோல்வி அடை­யாத அணி­யாக டயலொக் றக்பி லீக் கிண்­ணத்தைத் தக்­க­வைத்­துக்­கொண்­டது.

அத்­துடன் தனது சிரேஷ்ட வீரரும் இலங்கை றக்பி அணியின் முன்னாள் தலை­வ­ரு­மான பாஸில் மரி­ஜா­வுக்கு வெற்­றி­வா­கை­யுடன் கண்டி விளை­யாட்டுக் கழகம் விடை­ப­கர்ந்­தது.சக­ல­வி­த­மான றக்பி விளை­யாட்­டி­லி­ருந்தும் இந்தப் பரு­வ­கா­லத்­துடன் விடை­பெ­று­வ­தாக ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்த பாஸில் மரிஜா, தனது கடைசிப் போட்­டியில் ஒரு ஹீரோ­வா­கவே ஓய்வு பெற்றார்.

இப் போட்­டியில் அதீத ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய பாஸில் மரிஜா அலா­தி­யான மூன்று ட்ரைகளை வைத்து அனை­வ­ரி­னதும் பாராட்டைப் பெற்றார். அவ­ரது இந்த ஆற்­றல்­க­ளினால் கவ­ரப்­பட்ட ர­சி­கர்கள் அவரை ஓய்வு பெற­வேண்டாம் எனவும் கோஷம் எழுப்­பினர்.
எனினும் போட்­டியின் 72ஆவது நிமி­டத்தில் தனது மூன்­றா­வது ட்ரையை வைத்த மரிஜா, 74ஆவது நிமி­டத்தில் றக்பி ஆடு­க­ளத்­திற்கு விடை பகர்ந்தார்.

பாஸில் மரி­ஜா­வுக்கு சிறப்­பான பிரி­யா­விடை வழங்­க­வேண்டும் என்­பதில் குறி­யாக இருந்த கண்டி கழக வீரர்கள் இப் போட்­டியில் மிகவும் திற­மை­யாக விளை­யாடி புள்­ளி­களைப் பெற்­றனர். மரி­ஜாவும் தனது அதி­கபட்ச ஆற­்றல்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­வ­ராக முழு­வீச்­சுடன் விளை­யா­டினார்.
போட்டி ஆரம்­பித்து 5 நிமி­டங்­கள்­கூட ஆகாத நிலையில் றிச்சர்ட் தர்­ம­பால பரி­மா­றிய பந்தைப் பெற்­றுக்­கொண்ட அணித் தலைவர் கயான் வீர­ரட்ன இட­து­பு­றத்தில் ட்ரை ஒன்றை வைத்தார்.

அதற்­கான மேல­திகப் புள்­ளி­களை நைஜல் ரத்­வத்தே பெற்­றுக்­கொ­டுக்கத் தவ­றினார்.
அதன் பின்னர் சுமார் 20 நிமி­டங்கள் கடும்­போட்டி நில­வி­யது. 25ஆவது நிமி­டத்தில் ஹெவ்லொக்ஸ்
5 மீற்றர் எல்­லையில் இடம்­பெற்ற ஸ்கரம் ஒன்­றின்­போது எஸ். சூரி­ய­பண்­டார பரி­மா­றிய பந்­துடன் ட்ரை எல்­லைக்குள் ஓடிய மரிஜா அலா­தி­யான ட்ரை ஒன்றை வைத்து தனது திறமை மங்­க­வில்லை என்­பதை நிரூ­பித்தார்.

இதற்­கான மேல­திகப் புள்­ளி­களை இல­கு­வாகப் பெற்­றுக்­கொ­டுத்த நைஜல் ரத்­வத்தே, 3 நிமி­டங்கள் கழித்து பெனல்டி புள்­ளி­க­ளையும் பெற்­றுக்­கொ­டுத்தார்.இடை­வேளை நெருங்கிக் கொண்­டி­ருந்­த­போது லைன் அவுட் மூலம் பந்தைப் பெற்­றுக்­கொண்ட பாஸில் மரிஜா அதனை முன்­னோக்கி உதைத்து, ஓடிச் சென்று பந்தைத் தானே பற்­றிப்­பி­டித்து தனது இரண்­டா­வது ட்ரையை வைத்தார்.
இடை­வே­ளையின் பின்னர் 2ஆவது நிமி­டத்தில் கிடைக்­கப்­பெற்ற பெனல்­டியை ரத்­வத்தே புள்­ளி­க­ளாக்க 25–0 என கண்டி விளை­யாட்டுக் கழகம் முன்­னி­லையில் இருந்­தது.

எனினும் அதன் பின்னர் எதிர்­நீச்சல் போட்டு விளை­யா­டிய ஹெவ்லொக்ஸ் கழகம் சுதம் சூரி­ய­ பண்­டார மூலம் (49 நி.) ட்ரை வைத்­தது.தொடர்ந்து லிஸ்டன் ப்ளட்னி (57 நி.), லசிந்து இஷான் (70 நிஇ) ஆகிய இரு­வரும் ட்ரைகளை வைக்க புள்­ளிகள் நிலை 25–21 என கண்டி கழ­கத்­துக்கு சார்­பாக இருந்­தது.

இரண்டு நிமி­டங்கள் கழித்து நைஜல் ரத்­வத்தை பந்தை முன்­னோக்கி உதைத்து அதனை நோக்கி ஓடி பற்­றிப்­பி­டித்து இன்னும் சற்று தூரம் ஓடி மரி­ஜா­விடம் பரி­மாற பாஸில் மரிஜா தனது மூன்­றா­வது ட்ரையை வைத்து சற்று நேரத்தில் மகிழ்ச்சி ஆர­வா­ரத்­துக்கு மத்­தியில் விடை­பெற்றார்.
போட்டி முடி­வ­டைய சில செக்­கன்கள் இருந்த­ போது லசிந்து இஷான் மேலும் ஒரு ட்ரையை வைத்தார். ஹெவ்லொக்ஸ் கழ­கத்தின் நான்கு ட்ரைக­ளுக்­கு­மான மேல­திகப் புள்­ளி­களை ரீஸா முபாரக் பெற்­றுக்­கொ­டுத்தார். இப் போட்­டியில் நான்கு ட்ரைகளை வைத்த ஹெவ்லொக்ஸ் கழகம் அணிகள் நிலையில் மூன்றாம் இடத்தைப் பெற்­றது.

கடற்­படைக் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்­றது.போட்டி முடிவில் பாஸில் மரி­ஜா­வுக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்­கப்­பட்­டது.டயலொக் ஆசி­யாட்டா குழு­மத்தின் தலைமை சந்­தைப்­ப­டுத்தல் அதி­காரி அமலி நாண­யக்­கார பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு வெற்றிக் கிண்­ணத்தை கண்டி அணித் தலைவர் கயான் வீரரட்னவிடம் வழங்கினார். இரண்டாம் இடத்துக் கான கிண்ணத்தை இலங்கை றக்பி கால்பந்தாட்ட ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ப்ரியந்த ஏக்கநாயக்க வழங்கினார்.டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் குறியீடு மற்றும் ஊடகப் பிரிவு பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க விசேட அதிதியாக கலந்துகொண்டார். (என்.வீ.ஏ.)

Leave a Reply

Your email address will not be published.