அலரிமாளிகையில் இடம்பெற்ற அதிரடி அரசியல் சந்திப்பு

அலரிமாளிகையில் இடம்பெற்ற அதிரடி அரசியல் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று காலை அலரிமாளிகையில் அவசர சந்திப்பொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கத்தினை அமைக்கும் அழுத்தமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின் பிரதமர் கட்சி தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.