அரசாங்கம் பதவி விலக வேண்டும் : தினேஷ் குணவர்தன

அரசாங்கம் பதவி விலக வேண்டும் : தினேஷ் குணவர்தன

எமது வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியானது, வரலாறு காணாத வெற்றியாகும்.

எனவே நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர். அவ்விருவரினதும் கட்சிகள் எப்போதுமில்லாதவாறு சரிவைச் சந்தித்துள்ளன.

எனவே இத்தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாமல்போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.