இ.தொ.கா. 11 சபைகளில் ஆட்சி செய்யும்-ஆறுமுகன் தொண்டமான்

இ.தொ.கா. 11 சபைகளில் ஆட்சி செய்யும்-ஆறுமுகன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் நுவ­ரெ­லியா மாவட்டத்தில் நுவ­ரெ­லியா மாந­கர சபையை தவிர்த்து ஏனைய 11 சபை­க­ளையும் ஆட்சி செய்யும்.

ஆறு­முகன் தொண்­டமான் ஹட்டன் நக­ரத்தில் நேற்று நடை பெற்ற தேர்தல் வெற்­றிக்­கான மக்கள் ஒன்றுகூடலில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில், 13 வரு­டங்­க­ளுக்கு பின்­பாக கொட்­ட­கலை பிர­தேச சபையை ஆட்சி செய்­வதில் பெரு­மி­த­ம­டை­வ­தாக நுவ­ரெ­லியா மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ள­ரு­மான  தெரி­வித்தார்.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சாத­னையை ஏற்­ப­டுத்­துவோம். வர­லாற்று மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­துவோம் என்ற இலக்­கினை முன்­வைத்து தேர்தல் களத்தில் குதித்த நாம் 9 சபைகள் கிடைத்தால் போதும் என்று ஒரு வேளையில் எண்­ணினோம்.

எம்­மோடு கைகோர்த்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன மற்றும் முன்னாள் அமைச்­சரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சீ.பீ.ரத்­நா­யக்க ஊடாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் காணப்­படும் 12 உள்­ளூ­ராட்சி சபை­களில் நுவ­ரெ­லியா மாந­கர சபையை தவிர்த்து ஏனைய 11 சபை­க­ளையும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆட்சி செய்யும் என்­பதை துணி­வுடன் தெரி­விக்­கின்றேன்.

தல­வாக்­கலை நகர சபை, கொட்­ட­கலை பிர­தேச சபை, அக்­க­ரப்­பத்­தனை பிர­தேச சபை, நோர்வூட் பிர­தேச சபை, மஸ்­கெ­லியா பிர­தேச சபை ஆகிய முக்­கிய பிர­தேச சபை­களை வெற்­றியின் பாதையின் கீழ் ஆட்­சிக்கு கொண்டு வந்த நாம் ஏனைய பிர­தேச சபை­க­ளையும் ஆட்சி செய்வோம் என தெரி­வித்தார்.

இந்த மக்கள் சந்­திப்பில் சீ.பீ.ரத்­நா­யக்க கருத்துத் தெரி­விக்­கையில்,
ஆறு­முகன் தொண்­டமான் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து இம்­முறை நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தனித்தும் கூட்டு சேர்ந்தும் போட்­டி­யிட்டு இருந்­தாலும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்ளூர் அதி­கார சபை­களை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­காக நாம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வுடன் இணைந்து ஆறு­முகன் தொண்­ட­மானின் கரத்தைப் பலப்­ப­டுத்தி நுவ­ரெ­லியா மாந­கர சபையை தவிர்ந்த ஏனைய உள்­ளூ­ராட்சி சபை­களின் ஆட்சி அதி­கா­ரங்­களை கைப்­பற்­றினோம்.

இதற்­காக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸு­டனும் ஆறு­முகன் தொண்­ட­மா­னு­டனும் கைகோர்த்து செயல்­பட நாம் தயா­ராக இருக்­கின்றோம் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தான பொறுப்­பா­ள­ராக செயற்­ப­டு­பவன் நான் என்ற அடிப்­ப­டையில் உறு­தி­ய­ளிக்­கின்றேன் என தனது உரையில் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.