277 சபைகளை கைப்பற்றி மஹிந்த அணி அமோக வெற்றி…!

277 சபைகளை கைப்பற்றி மஹிந்த அணி அமோக வெற்றி…!

சாதனை படைத்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் நேற்று இர­வு­வரை வெளி­யான முடி­வு­க­ளின்­படி முன்னாள் ஜனா­தி­பதி   மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன     மொத்­த­மாக 4621652 வாக்­கு­களை பெற்று  225 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்றி  அமோ­க­வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.

அத்­தோடு அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும்     ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 3210 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளதுடன் 45.01   வீத­மான வாக்­கு­களை    இக்­கட்சி பெற்­றுக்­கொண்­டுள்­ளது.
மேலும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க  தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சி நாடு முழு­வதும் மொத்­த­மாக 3303258 வாக்­கு­களை பெற்று

41 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை  கைப்­பற்­றி­யுள்­ள­துடன்  2061 உறுப்­பி­னர்­களை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும்  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து  மொத்­த­மாக    1280000    வாக்­கு­களை பெற்று 10 சபை­களை  கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 892  உறுப்­பி­னர்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

இதே­வேளை வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 262151 வாக்­கு­களை பெற்று 30  சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன்    309 உறுப்­பி­னர்­களை   பெற்­றுள்­ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி     இரண்டு சபை­களை  கைப்­பற்­றி­யுள்­ள­துடன்  ஒரு சபையில் எதிர்க்­கட்­சி­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது.  மலை­ய­கத்தில் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து  சேவல் சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை  தொழி­லாளர் காங்­கிரஸ் பல சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன்   தமிழ்   முற்­போக்கு கூட்­டணி  மூன்று சபை­களை  ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து கைப்­பற்­றி­யுள்­ளது.

 

.

 

 

One Response to "277 சபைகளை கைப்பற்றி மஹிந்த அணி அமோக வெற்றி…!"

  1. Pingback: 277 சபைகளை கைப்பற்றி மஹிந்த அணி அமோக வெற்றி…! – Express News

Leave a Reply

Your email address will not be published.