சற்றுமுன் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

சற்றுமுன் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

ரஷ்யாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று சரடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.என். 148 ரக உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் பயணித்துள்ளது.

குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்தும் விமானம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொருங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விமானத்தில் பயணித்த 71 பேரும் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
#Russia #MoscowPlanecrash #tamilnews #tamilenews

Leave a Reply

Your email address will not be published.