காய்கறி போளி செய்வது எப்படி?

காய்கறி போளி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

 • கேரட் – 1
 • உருளைக்கிழங்கு – 1
 • முள்ளங்கி – 1
 • முட்டைகோஸ் – 1
 • கோதுமை மாவு – 1/2 கப்
 • பால் – 1/2 கப்
 • பட்டை – 2 துண்டு
 • சோம்பு – 1/2 டீஸ்பூன்
 • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
 • எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
 • கொத்தமல்லி – சிறிது
 • உப்பு – தேவைக்கேற்ப
 • சர்க்கரை – 200 கிராம்

செய்முறை

கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ் மூன்றையும் துருவி கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.. ஒரு பாத்திரத்தில் கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ் துருவலுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும். 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து உருட்டிக் கிண்ணம் போல் செய்து, அதனுள் காய்கறி கலவையை வைத்து மூடவும். அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று கனமாகத் தேய்க்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக்கல்லில் போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும். சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு காய்த்து தனியே எடுத்துக் கொள்ளவும். ஆறிய சக்கரை பாகை சுட்டெடுத்த போளியின் மேல் ஊற்றவும்.

 

Leave a Reply

Your email address will not be published.