பாவம் போக்கும் சிவன் விரதம்

பாவம் போக்கும் சிவன் விரதம்

கார்த்திகை சோமவாரத்தில் விரதமிருந்து சிவபெருமானைத் துதித்துச் சங்காபிஷேகம் கண்டு தரிசனம் செய்பவர்கள் மங்களம் யாவும் பெறுவார்கள்.

சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் சந்திரன் என்றும் பொருளாகும். சந்திரன் கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் தோன்றினான். தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதித்து நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான். அவன் பெயரால் சோமவாரம் (திங்கள்கிழமை) தோன்றியது.

சோமனும் தன் பெயரால் தனது வாரத்தில் இந்த விரதம் புகழ்பெற வேண்டும் என்று சிவபெருமானை பிரார்த்தித்தான். அதனால் சோமவார விரதம் சிறப்புடையதாயிற்று.

சந்திரன் சிவபெருமான் திருமுடியில் அமர்ந்தது கார்த்திகை மாத சோம வாரத்தில்தான். கிருதயுகம் தோன்றியதும் சோம வாரத்தில்தான். பதினான்கு ஆண்டுகள் சோமவாரம் தோறும் பூஜை செய்து இரவு கண்விழித்து சிவபுராணம் படித்து காலையில் ஹோமம் செய்து, கலச நீரால் அபிஷேகம் செய்து கணவனும், மனைவியுமாக பூஜை செய்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு வேண்டிய சந்திரனின் அபிலாஷையை நிறைவு செய்தார் சிவபெருமான்.

சோமவார விரதம் இருப்பவர்களின் பாவங்களைப் போக்கி பகைவரின் பயத்தையும் அகற்றி, அவர்களை சிவபெருமான் நற்கதிக்கு ஆளாக்குவார்.

Leave a Reply

Your email address will not be published.